பள்ளங்கி கோம்பை முத்துமாரியம்மன் கோவில் திரு விழா
பள்ளங்கி கோம்பை முத்துமாரியம்மன் கோவில் திரு விழா
பள்ளங்கி கோம்பையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திரு விழா
வருடம் வருடம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகின்றது.
இக்கோவில் உருவான கதை.
இந்த முத்து மாரியம்மன் பாசமும் மன்னிப்புக்கு ஏற்ற தாயாகவும் காணப்படுகின்றாள்.
அதற்காக அவள் தன்னைப்போலவே தான் இருக்கும் ஊரும் மக்களும்
இருக்க வேண்டும் என எண்ணி பல கிராமங்களை கடந்து பல ஆறுகளும் கடந்து வந்தால் ஆனால் அவளுக்கு எந்த இடமும் அவளுடைய குணங்களுக்கு ஏற்ற இடமாக தெரியவில்லை.
இதனால் தான் எங்கிருந்து வந்தாலோ அங்கயே
போக நினைத்தால்.அப்பொழுது ஒரு பெரிய மரம் முத்துமாரியின் மனதை
ஈர்த்தது.அந்த மரத்தடியில் உட்கார்ந்து தன்னுடைய சகோதர சகோதரிகளை
நினைத்து கொண்டிருந்தாள்.
அப்போது அவ்வலியே கால்நடை மெய்த்து
கொண்டிருந்த சிறுமி தான் வைத்து இருந்த வாளியில் இருந்த கூல்லை
அம்மா இந்தாருங்கள் நான் வீட்டுக்கு போக வேண்டும்.இதை நான் உண்காமல் போனால் என் தாயார் என்னை கண்டிப்பார். மற்றும் நாங்கள்
மிகவும் சிரமப்பட்டும் குடும்பம்.அதனால் இதனை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை நான் உங்களுக்கு அளிக்கிறேன்
என்றாள்.
அம்பாளும் எந்தவித கேள்வியும் இன்றி அந்த குழந்தையின் செய்யலை ரஷிதுக்கொன்டே அக்கூலை ருசித்து குடித்தால்.
உடனே அக்குழந்தை அம்மா நான் போய் வருகிறேன் என் தாயார் தேடுவர்
என்று சொல்லி சென்றுவிட்டாள்.
முத்துமாரி இந்தகுழந்தையிடம் தினமும் பேசுவதற்காகவும் அவள் கொண்டு வரும் கூழை குடிப்பதர்காகவும்
அந்த மரத்தடியிலேயே தங்கினாள்.
அவள் தங்கிய அந்த இடமே இன்று கோம்பை முத்து மாரியம்மன் கோவில் என்று பெயர் உள்ளத்து.

